டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை அனுமதிப்பது குறித்து போலீசார் தான் முடிவு எடுக்க வேண்டும் - உச்சநீதிமன்றம்

0 1601

டெல்லியில் விவசாயிகளின் டிராக்டர் பேரணியை அனுமதிப்பது குறித்து போலீசார் தான் முடிவு எடுக்க வேண்டுமென உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

டெல்லியில் வருகிற 26 ஆம் தேதி டிராக்டர் பேரணி நடத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த பேரணிக்கு தடை விதிக்க கோரி தொடரப்பட்ட வழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பாப்டே தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,தலைநகரில் சட்டஒழுங்கை காக்கும் பொறுப்பு போலீசாரின் கையில் உள்ளது என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.தலைநகரில் யாரை அனுமதிக்கலாம், யாரை அனுமதிக்கக்கூடாது என்பதை டெல்லி போலீஸ்தான் முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறிய நீதிபதிகள்,
இதில் எந்தவொரு உத்தரவையும் பிறப்பிக்க இயலாது என்று கூறி விசாரணையை 20 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments