புதிதாக 551 பேருக்கு கொரோனா பாதிப்பு : 22 மாவட்டங்களில் ஒற்றை இலக்கத்தில் தொற்று
தமிழகத்தில் மேலும் 551 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பெருந்தொற்றுக்கு சிகிச்சை பெற்ற 758 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ள நிலையில், கோவையில் 103 வயது முதியவர் ஒருவரும் உயிரிழந்தார். சென்னையில் புதிதாக 158 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஒற்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது. பெரம்பலூர், தொடர்ந்து கொரோனா இல்லாத மாவட்டமாக நீடிப்பதாக தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Comments