சாலை விபத்து மரணத்தை குறைக்க, சாலை பாதுகாப்பு மாதம் - அமைச்சர் நிதின் கட்காரி துவக்கி வைத்தார்
தினமும் 30 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கும் இலக்கை தற்போது எட்டியிருக்கும் நிலையில், வரும் மார்ச் மாதத்திற்குள் தினசரி 40 கிலோ மீட்டர் என்ற இலக்கு எட்டப்படும் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின்கட்காரி தெரிவித்துள்ளார்.
சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சியை டெல்லியில் தொடங்கி வைத்துப் பேசிய அவர், தினமும் சாலை விபத்துகளில் 415 பேர் உயிரிழப்பதை தடுக்க வேண்டியது அவசியம் என்றார்.
அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டு ஒன்று சாலை விபத்துகளால் இறப்போரின் எண்ணிக்கை 7 லட்சமாக உயர வாய்ப்புள்ளது என்ற அவர், அடுத்த நான்கு ஆண்டுகளில் சாலை விபத்துகளால் உயிரிழப்போரின் எண்ணிக்கையை பாதியாக குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
இதுவரை சாலை பாதுகாப்பு வாரம் கடைபிடிக்கபட்டு வந்த நிலையில், இனி சாலை பாதுகாப்பு மாதம் கடைபிடிக்கப்படும் என்றும் குறிப்பிட்டார். சாலை விபத்து மரணத்தை 2025 ஆம் ஆண்டுக்குள் 50 சதவீதம் வரை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், தமிழ்நாட்டில் இது 53 சதவீதம் வரை குறைந்து இருப்பதாகவும் நிதின்கட்காரி பாராட்டு தெரிவித்தார்.
Comments