மன்னார் வளைகுடாவில் பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றக் கோரி வழக்கு : மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு
மன்னார் வளைகுடாவில் உள்ள பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தேவையற்ற மீன்பிடி வலைகளை அகற்றி கடல் வாழ் உயிரினங்கள் மற்றும் கடல் பாசிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் மத்திய மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பகுதி ஒருங்கிணைந்த பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டி பொதுநல வழக்கை தாக்கல் செய்த மனுதாரர், அங்கு மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள் பிளாஸ்டிக் பொருட்கள், தேவையற்ற பழைய மீன்பிடி வலைகளை கடலில் வீசுவதால், கடல் மாசடைந்து உயிரினங்கள் பலியாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக கூறியிருந்தார்.
சுமார் 6 முதல் 8 மில்லியன் டன் அளவிலான பிளாஸ்டிக் கழிவுகள் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருப்பதாகவும் மனுதாரர் புகார் கூறியிருந்தார்.
Comments