இரு நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியில் வறண்ட வானிலையே நிலவும் - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

0 1522

டுத்த 48 மணி நேரத்திற்கு தமிழகம், புதுச்சேரியில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வருகிற 20, 21-ம் தேதிகளில் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும், ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலேயே நிலவும் என்றும் கூறப்பட்டுள்ளது. சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும், காலை நேரத்தில் லேசான பனி மூட்டம் காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தென் மேற்கு அரபிக் கடல் மற்றும் தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் மணிக்கு 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments