தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு : நேரில் ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த் ?

0 5530
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கு : நேரில் ஆஜராவாரா நடிகர் ரஜினிகாந்த் ?

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்தி வரும் ஒரு நபர் ஆணையம் தனது 24-வது கட்ட விசாரணை தொடங்கியுள்ள நிலையில், இந்த விசாரணையில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராவாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 13 பேர் பலியான விவகாரத்தில் நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஏற்கனவே ஒரு முறை ஆணையத்தில் ஆஜராகி அவர் விளக்கமளித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று தனது 24-வது கட்ட விசாரணையை தொடங்கியுள்ள ஒரு நபர் ஆணையம், விசாரணைக்கு ஆஜராகுமாறு ரஜினி உட்பட 57-பேருக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இதுவரை, 586-பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments