வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

0 24474
வீடு கட்ட தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு

திருச்சியில் வீடு கட்டுவதற்காக தோண்டப்பட்டு நிர் நிரம்பிய அஸ்திவார பள்ளத்தில் தவறி விழுந்து 4 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார்.

விமான நிலையம் அருகேயுள்ள ராஜமாணிக்கம் பிள்ளை நகர் பகுதியை சேர்ந்த சக்திவேலின் வீட்டுக்கு அருகேயுள்ள காலி இடத்தில் வீடு கட்டுவதற்காக அஸ்திவாரப் பள்ள தோண்டப்பட்டிருந்தது.

தொடர் மழையால் பள்ளத்தில் நீர்நிரம்பியிருந்தது. இதனை அறியாமல் அங்கு சென்று விளையாடிக் கொண்டிருந்த சக்திவேலின் 4 வயது மகள் பாண்டி ஸ்ரீ, அதில் தவறி விழுந்து உயிரிழந்தார்.

நீண்ட நேரமாக பாண்டி ஸ்ரீயை தேடிய பெற்றோர், இறுதியாக பள்ளத்தில் இருந்து சடலமாக மீட்டனர். இது குறித்து கேகே நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments