நீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் பேசிய குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு

0 2182

நீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் குருமூர்த்தி பேசியதாகக் கூறி அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு எடுக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டுள்ளது. 

சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் கிருபாகரன், ஆதிகேசவலு அமர்வு முன் ஆஜரான வழக்கறிஞர் சார்லஸ் அலெக்சாண்டர், துக்ளக் ஆண்டு விழாவில் நீதித்துறையைக் களங்கப்படுத்தும் வகையில் குருமூர்த்தி பேசியுள்ளதாகக் குற்றஞ்சாட்டினார்.

அதற்காகக் குருமூர்த்தி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என முறையிட்டார். இந்த முறையீட்டை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் மனுவாகத் தாக்கல் செய்ய அறிவுறுத்தினர். மனு தாக்கல் செய்தால் பட்டியலிட்டு விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments