கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் நிறைவடையும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
கோவையில் ஸ்மார்ட் சிட்டி திட்டப்பணிகள் விரைவில் முடிக்கப்பட்டு அடுத்த மாதம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
எம்.ஜி.ஆரின் 104 வது பிறந்தநாளை முன்னிட்டு கோவை கொடிசியா பகுதியில் நடைபெற்ற ரேக்ளா ரேசை பார்வையிட்ட அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு கார், புல்லட் உள்ளிட்ட பரிசுகளை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், தமிழ்நாடு ரேக்ளா கிளப் வைத்த கோரிக்கைக்கிணங்க கோவை பொள்ளாச்சியில் ரேக்ளா சிலை அமைத்து தரப்படும் என்றார்.
Comments