அயோத்தியில் மசூதி கட்டும் பணி: குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவும், மரக்கன்றுகள் நடவும் திட்டம்
அயோத்தியில் மசூதி கட்டும் பணி தொடங்குவதன் அடையாளமாகக் குடியரசு நாளில் தேசியக் கொடி ஏற்றவும், மரக்கன்றுகள் நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ராமர் கோவில் கட்டுமிடத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மசூதி கட்டும் பணி குறித்து இந்தோ - இஸ்லாமிக் பண்பாட்டு அறக்கட்டளை உறுப்பினர்கள் நேற்றுக் கூடிப் பேசினர். அப்போது குடியரசு நாளில் தேசியக் கொடியேற்றியும் மரக்கன்றுகள் நட்டும் முறைப்படி திட்டத்தைத் தொடங்கத் தீர்மானிக்கப்பட்டது.
மசூதியுடன் மருத்துவமனை, அருங்காட்சியகம், நூலகம், சமையற்கூடம், இஸ்லாமியப் பண்பாட்டு ஆய்வு மையம், பதிப்பகம் ஆகியன கட்டும் திட்டத்துக்கு மாவட்ட நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் நிலத்தின் தன்மை குறித்த ஆய்வும் தொடங்கியுள்ளது.
Comments