அமெரிக்காவில் புதிய அதிபராக ஜோ பைடன் நாளை மறுநாள் பதவியேற்பு
அமெரிக்காவின் புதிய அதிபராக ஜோ பைடன் நாளை மறுநாள் பொறுப்பேற்க உள்ளதால் வாஷிங்டனில் பாதுகாப்புக்கு ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் நாடாளுமன்ற கட்டடத்தைச் சுற்றி 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
பாதுகாப்புப் பணிகளில் 25 ஆயிரம் தேசிய பாதுகாப்புப் படை வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவில் உள்நாட்டுப் போருக்குப் பின் ஆப்ரஹாம் லிங்கன் பதவியேற்றபோதுதான் இதுபோன்ற பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Comments