பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது

0 1957
பரபரப்பான சூழ்நிலையில் புதுச்சேரி சட்டப்பேரவை இன்று கூடுகிறது

புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

கடந்த ஜூலை மாதம் 20-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கூட்டம் நடைபெற்றபின் புதுச்சேரி சட்டப்பேரவை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்றைய கூட்டத்தில் அரசின் கூடுதல் செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட உள்ளது.

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும், புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரியும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகிறது. அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் ராஜினாமா, காங்கிரசில் உட்கட்சிப் பூசல், தி.மு.க. பகிரங்க விமர்சனம் ஆகியவற்றுக்கு இடையே இன்றைய கூட்டம் பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments