கொச்சி விமான நிலைய பயன்பாட்டுக்கான மின்சாரம்: செயற்கைக் குளங்களை உருவாக்கி, சூரிய மின் தகடுகள் பதிப்பு
கேரள மாநிலம் கொச்சி விமான நிலைய பயன்பாட்டுக்காக செயற்கை குளங்களை உருவாக்கி, அதில் மிதக்கும் வகையில் சூரியமின் சக்தி தகடுகள் அமைத்து மின்சாரம் உற்பத்தி செய்யும் பணிகள் தொடங்கியுள்ளன.
இதுகுறித்து கொச்சி சர்வதேச விமான நிலைய நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிஐஏஎல் நிறுவனத்துக்குச் சொந்தமான 130 ஏக்கர் கோல்ஃப் விளையாட்டு மைதானத்தில் இரண்டு செயற்கை குளங்கள் உருவாக்கப்பட்டு, அவற்றில் மிதக்கும் விதமாக ஒரு ஏக்கர் பரப்பளவில் 1,300 சூரியமின் சக்தி தகடுகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments