ஓளரங்காபாத் பெயர் மாற்றம் குறித்து சிவசேனா, காங்கிரஸ் இடையே கருத்து மோதல்
மகாராஷ்டிராவில் உள்ள ஓளரங்காபாத் நகரின் பெயரை மாற்றுவது தொடர்பாக ஆளும் சிவசேனா, காங்கிரஸ் கூட்டணியில் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
சிவசேனை கட்சிப் பத்திரிகையான சாம்னாவில் அக்கட்சி எம்.பி. சஞ்சய் ராவத் அண்மையில் எழுதிய கட்டுரையில், மகாராஷ்டிரத்தின் ஓளரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர் என்று மாற்ற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள மாநில காங்கிரஸ் தலைமை, மகாராஷ்டிராவில் இதற்கு முன்பு பாஜக-சிவசேனை கூட்டணிதான்ஆட்சியில் இருந்தது என்றும் அப்போது, இதுபோன்ற பெயர் மாற்றும் யோசனையை சிவசேனை முன்வைக்காதது ஏன்? என்றும் கேள்வி எழுப்பியுள்ளது.
Comments