ரஷ்யாவில் மீத்தேனில் இயங்கும் மறுபயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் தயாரிப்பு

0 1602
ரஷ்யாவின் புதிய மறு பயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் 50 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் புதிய மறு பயன்பாட்டு ராக்கெட் எஞ்சின் 50 முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனைக் கொண்டதாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய விண்வெளி முகமையான ரோஸ்காஸ்மோஸ் இணையத்தளத்தில், ஆமுர் எஸ்பிஜி நடுத்தர வகையைச் சேர்ந்த ராக்கெட்டைச் செலுத்த மீத்தேனை எரிபொருளாகக் கொண்ட எஞ்சினைத் தயாரித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. இந்த எஞ்சினின் முதற்கட்டம் பத்து முறை மீண்டும் மீண்டும் பயன்படுத்தும் திறனுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், 50 முறை பயன்படுத்தும் வகையில் இதை மேம்படுத்தும் வழிகளைப் பரிசீலித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

இது வழக்கமாக 12 டன் எடையைக் கொண்டு செலுத்தும் திறனுள்ளது என்றும், மீண்டும் மீண்டும் பயன்படுத்தும்போது ஒன்பதரை டன் எடை செலுத்து திறன் கொண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments