ஜெ.நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் நாளை டெல்லி பயணம்

0 14920
ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவுக்கு பிரதமர் மோடியை அழைப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை டெல்லி செல்கிறார்.

மெரினா கடற்கரையில் கட்டப்பட்டு வரும் ஜெயலலிதாவின் நினைவிட கட்டுமானப் பணிகள் முடியும் தருவாயில் உள்ள நிலையில், சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே நினைவிடத்தை திறக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், நாளை டெல்லி செல்லும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடியை நேரில் சந்தித்து, ஜெயலலிதா நினைவிட திறப்பு விழாவில் பங்கேற்க அழைப்பு விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரதமர் ஒதுக்கும் தேதி அடிப்படையில் நினைவிடம் திறக்கப்படும் தேதி இறுதி செய்யப்படுமென தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments