ஏரியில் படர்ந்திருக்கும் அதிசய மரம்.. இணையத்தை கலக்கும் ஆஸ்திரேலியாவின் விஜய் சேதுபதி!
காலங்கள் மாறினாலும் இயற்கையின் அதிசயம் உலகில் தொடர்ந்துக் கொண்டு தான் இருக்கிறது. பூமியில் கண்டுபிடிக்கப்படாத அதிசயங்கள் இன்றும் ஏராளமாக உள்ளன. இந்த பூமியில் அதிசயம், ஆச்சரியம், அழகுகள் என்று ஏராளமான இயற்கை காட்சிகள் நிறைந்து காணப்படுகின்றன. அதே நேரத்தில் நம் கற்பனைக்கு எட்டாத அளவிற்கு மர்மங்களும், அதிசயங்களும், ஆச்சரியங்களும் நம்மை பிரமிக்க வைத்து வருகிறது.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து மாகாணத்தில் உள்ளது ககோரா ஏரி. நேற்று வரை சாதாரணமாக பார்க்கப்பட்ட ஏரி, இன்று கண்கவரும் சுற்றுலாத் தளமாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்தவர் பிரபல புகைப்பட கலைஞர் டெர்ரி மோரோனே. 96 படத்தில் வரும் விஜய் சேதுபதி போல் கடல், மலை, காடு என சுற்றிவரும் இவர் ஆஸ்திரேலியாவில் உள்ள ககோரா ஏரியை கடந்த ஆறு மாதமாக புகைப்படம் எடுத்து வருகிறார். தான் எடுத்த புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில், பதிவிட தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் புரூம்ஸ் கடற்கரையின் முகப்பில் அமைந்துள்ள இந்த ககோரா ஏரி பருவங்களின் இயல்புகேற்ப தனது வடிவத்தையும், நிறத்தையும் மாற்றி மாற்றி காண்பிக்கும். தற்போது வறண்டு காணப்படும் இந்த ஏரி பார்வையாளர்களின் ரசனையை வெகுவாக ஈர்த்துள்ளது. அழகிய மரம் ஏரியில் படர்ந்திருப்பது போல காட்சியளிக்கும் ஏரியின் நீர்வழித் தடங்கள் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆறு மாத காலத்தில் கோல்டன், நீலம், கருப்பு, பச்சை உள்ளிட்ட பல்வேறு நிறங்களை மாற்றியுள்ளது.
இதுகுறித்து புகைப்பட கலைஞர் டெர்ரி மொரோனே, ”இந்த புகைப்படத்தை காணும் யாருமே இதனை உண்மை என்று நம்ப மாட்டார்கள். ஆனால் உலகில் இதுவரை யாரும் காணாத காட்சியை நீங்கள் பார்க்கும்போது இயற்கையின் அதிசயத்தை உணர முடியும். பற்றி எரியும் நெருப்பு மரம் போல் காட்சியளிக்கும் இந்த ஏரியின் வடிவம் தன்னை பெரிதும் கவர்ந்துவிட்டது” என்று குறிப்பிட்டுள்ளார்.
Comments