"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
இந்தோனேசியாவில் வெடிக்க தொடங்கிய செமெரு எரிமலை: பல கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழ்ந்து தள்ளும் காட்சிகள்
இந்தோனேசியாவின் செமெரு மலைத்தொடரில் அமைந்துள்ள எரிமலை வெடிக்க தொடங்கியுள்ளது.
அந்நாட்டில் சுமார் 130 எரிமலைகள் உள்ளன. இந்த நிலையில், கிழக்கு ஜாவாவில் 3,676 மீட்டர் உயரம் கொண்ட செமெரு எரிமலை வெடித்து பல கிலோ மீட்டர் உயரத்துக்கு சாம்பலை உமிழ்ந்து தள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், அங்கு வசிக்கும் மக்களை அப்புறப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்படவில்லை. அண்மை காலமாக அங்குள்ள மெரபி , சினபங்க் ஆகிய இரண்டு எரிமலைகளும் சீற்றத்துடன் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.
Mount #Semeru, the highest #volcano on Java island spewed hot clouds in East Java Province, #Indonesia. pic.twitter.com/Yy8O9B3Jup
Comments