திருவனந்தபுரம் நோக்கி சென்ற விரைவு ரயிலின் சரக்கு பெட்டியில் தீ: பயணிகளின் சாதுர்ய நடவடிக்கையால் பெரும் சேதம் தவிர்ப்பு

0 2450

கேரளாவில், ஓடும் ரயிலின் சரக்கு பெட்டியில் திடீரென தீப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மங்களூரில் இருந்து திருவனந்தபுரம் நோக்கி சென்ற மலபார் எக்ஸ்பிரஸ், வர்கலா அருகே வந்த போது, சரக்கு பெட்டியில் இருந்து புகை வெளியேறுவதை கவனித்த பயணிகள், அபாயச் சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் சிறிது நேரத்தில் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தீப்பிடித்த சரக்குப்பெட்டி மட்டும் தனியாக அகற்றப்பட்டு, பயணிகள் அனைவரும் பத்திரமாக கீழே இறக்கிவிடப்பட்டனர்.

தீப்பிடித்ததை பயணிகள் உடனடியாக கவனித்து ரெயிலை நிறுத்தியதால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments