மான் வேட்டை வழக்கில் பிப்.6ம் தேதி கட்டாயம் ஆஜராக சல்மான்கானுக்கு நீதிபதி உத்தரவு

0 2331
மான் வேட்டை வழக்கில் பிப்.6ம் தேதி கட்டாயம் ஆஜராக சல்மான்கானுக்கு நீதிபதி உத்தரவு

இராஜஸ்தானில் படபிடிப்பின்போது மான் வேட்டையாடியது தொடர்பான வழக்கில் நடிகர் சல்மான் கான் பிப்ரவரி 6ம் தேதி விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு ஜோத்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த வழக்கில் விசாரணை நீதிமன்றத்தால் 5 ஆண்டு தண்டனை விதிக்கப்பட்ட சல்மான் கான் ஜோத்புர் மாவட்ட நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார். இவ்வழக்கில் நேரில் ஆஜராவதற்கு சல்மான் கான் சார்பில் விலக்கு கோரப்பட்டுள்ளது.

நேற்று ஜோத்புர் மாவட்ட நீதிமன்ற விசாரணைக்கு சல்மான் கான் ஆஜராகவில்லை. பிப்ரவரி 6ம் தேதி கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments