கர்நாடகாவில் மீண்டும் பாஜக பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் - அமைச்சர் அமித்ஷா

0 29912

கர்நாடகாவில் பாஜக அரசு 5 ஆண்டுக்காலத்தைப் பூர்த்தி செய்து மீண்டும் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியைக் கைப்பற்றும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

இரண்டு நாள் பயணமாக நேற்று பிற்பகல் பெங்களூர் வந்த அமித் ஷா, காவல்துறையினர் குடியிருப்பு திறப்பு நிகழ்ச்சி உள்பட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்றுப் பேசினார்.

அண்மையில் நடைபெற்ற கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் கட்சியின் விமர்சனங்களுக்கு அமித்ஷா பதிலடி கொடுத்தார். பாஜக மீது குறைகூறுவதை விட்டு மக்களின் வளர்ச்சிக்காகப் பணியாற்றுமாறு எதிர்க்கட்சிகளை அமித் ஷா வலியுறுத்தினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments