காணும் பொங்கலையொட்டி தனுஷ்கோடியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
காணும் பொங்கலையொட்டி ராமேஸ்வரம், தனுஸ்கோடியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்ததுடன், தடையை மீறி கடலில் குளித்ததால், கடலோர காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.
சென்னை, திருச்சி, மதுரை போன்ற தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து மட்டுமல்லாமல் வட மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் தனுஸ்கோடி கடற்கரையில் குவிந்ததால், கூட்ட நெரிசல் ஏற்பட்டதுடன், வாகன போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Comments