ஓடிடி, ஆன்லைன் செய்தி தளங்களுக்கு கடிவாளம் போடும் புதிய சட்டம்?
ஓடிடி, ஆன்லைன் செய்தி தளங்கள் உள்ளிட்ட டிஜிட்டல் மீடியாக்கள் சுய ஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் வகையில், விரிவான சட்டம் இயற்றுவதற்கான பணிகளை மத்திய அரசு தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு, 20 கோடி பயனாளர்களுடன் ஓடிடி சந்தை விரிவடைந்து வருகிறது. வயது வந்தோருக்கான கன்டன்ட்டுகள், ஆபாசமான வசனங்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் ஓடிடி தளங்களில் இடம்பெறுவதாக புகார்கள் உள்ளன.
இதேபோல பொய்ச்செய்திகள், தவறான வீடியோக்களும் பெருக்கெடுப்பதாக புகார்கள் உள்ளன. இந்த நிலையை மாற்றி, டிஜிட்டல் மீடியாக்கள் சுயஒழுங்குமுறையை கடைப்பிடிக்கும் வகையிலும், டிஜிட்டல் மீடியாக்களின் சுதந்திரத்தை பாதிக்காமலும், பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் சட்டம் இயற்ற திட்டமிடப்பட்டுள்ளது.
Comments