தென்கொரியாவை அதிர வைத்த வழக்கு.... ' வளரும் பையன் 'டெலிகிராம் மீது குற்றச்சாட்டு!
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் டிஜிட்டல் யுகத்தால் எண்ணற்ற மாற்றங்கள் அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. தற்போது ஏற்பட்டுள்ள இந்த டிஜிட்டல் வளர்ச்சியால் மளிகை கடையில் தொடங்கி மால் வரை டிஜிட்டல் பயன்பபாடுதான் நடைபெறுகிறது. டிஜிட்டல் நாகரீகம் நேரவிரயைத்தை குறைத்தாலும் அழகான ரோஜாவிலும் முள் இருக்கத்தான் செய்யும் என்பது போல, ஆபத்துக்களும் நிறைந்தே உள்ளன. டிஜிட்டல் யுகத்தால், இணையதள தாக்குதல்கள் 500% இந்தக் கால கட்டத்தில் அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது.
டிஜிட்டல் செயல்பாடு அதிகரித்திருப்பதை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்கின்றனர் டிஜிட்டல் உலக திருடர்கள். வைரஸ்கள், ரேன்சம்வேர், மோசடிகள், வங்கி தொடர்பான தகவல்களைத் திருடுகிற டிரோஜன்கள் மற்றும் வெப்கேம் ஹேக்கிங் என்ற மென்பொருள் தாக்குதல்களை அவர்கள் தொடர்ந்து நடத்தி வருகின்றனர். டிஜிட்டல் வளர்ச்சிக்கேற்ப குற்றங்களும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.
உலகில் ஸ்மார்ட்போன் விற்பனை அதிகம் உள்ள நாடுகளில் தென்கொரியாவும் ஒன்று. அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்பதற்கேற்ப, டிஜிட்டல் தொடர்பான குற்றங்கள் இங்கு அதிகரித்துக்கொண்டிருக்கின்றன. ஒ ஒரு குற்றச்செயலால் தென்கொரியாவை மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உலகையும் திரும்பி பார்க்க வைத்த வழக்கு தான் சொ -ஜேயூ- பின் வழக்கு.
தற்போது, 25 வயதாகும் சொ -ஜேயூ- பின் டெலிகிராமில் பல பெண்களுக்கு வேலை தருவதாக கூறி, அவர்களுடைய மார்பகங்களின் புகைப்படங்களை வாங்கி கொள்வார். பின்னர் அந்த புகைப்படங்களை வைத்து அவர்களை மிரட்டி பணம் பறிப்பது தான் இவரின் ஸ்டைல். அப்படி, 70- க்கும் மேற்பட்ட பெண்களை, ஏமாற்றி பணம் பறித்துள்ளார். அதில் 15 சிறுமிகளும் அடக்கம். இவரால் வாழ்க்கையை தொலைத்து அட்ரஸ் இல்லாமல் நிர்கதியாகி நிற்கும் பெண்கள் ஏராளம். இவரை கைது செய்யக்கோரி தென் கொரியாவில் போரட்டங்கள் வலுக்க தொடங்கியதையடுத்து கடந்த 2019 ஆம் ஆண்டு சொ -ஜேயூ- பின் கைது செய்யப்பட்டார்.
வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதால், அவருக்கு 40 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இந்த வழக்கின் எதிரொலியாக தென் கொரியாவின் சிறார்கள் தொடர்பான குற்றங்களுக்கு குறைந்தபட்ச தண்டனையான இரண்டரை வருடத்தை 5 வருடங்களாக உயர்த்தியது தென் கொரிய அரசு.
இதற்கிடையே, பலரும் தற்போது பிரைவசி பாலிசி காரணமாக வாட்சாப்பில் இருந்து டெலிகிராமிற்கு மாறி வருகின்றனர். இந்தநிலையில், சொ -ஜேயூ- பின் வழக்கை நினைவு கூர்ந்த விவரம் அறிந்தவர்கள், டெலிகிராம் பிரவைசி பாலிசி குறித்தும் விமர்சித்து வந்தனர். இதுக்குறித்து சமீபத்தில் கருத்து தெரிவித்துள்ள டெலிகிராம் நிறுவனத்தின் அதிகாரிகள் , ஆபாச குற்றங்களுக்கு டெலிகிராம் ஒருபோதும் ஆதரவு அளிக்காது என்பதை தெரிவித்துள்ளனர். மேலும் தற்போது பல மாற்றங்களோடு, பாதுகாப்பு நிறைந்து டெலிகிராம் விளங்குவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
டிஜிட்டல் உலகம் எனும் கடலில் எண்ணற்ற விஷமிகள் நிறைந்துள்ளனர். என்னதான் காவல்துறையினர் கண்கொத்தி பாம்பாய் இருந்தாலும் குற்றங்களை தடுக்க முடியவில்லை என்பதை உண்மை. டிஜிட்டல் உலகை பொறுத்த வரை நமக்கு நாம்தான் முதல் பாதுகாப்பு. எந்த எந்த விஷயங்களில் டிஜிட்டல் உலகில் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்பதில் கவனமாக இருப்பதே நல்லது!
Comments