பழுதாகி நின்ற பேட்டரி வாகனத்தை தனது பற்களால் கடித்து இழுக்கும் புலி

0 6049
கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்று, 5க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கும் கார் ஒன்றை தனது பற்களால் கடித்து இழுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

கர்நாடகாவில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் புலி ஒன்று, 5க்கும் மேற்பட்டவர்கள் அமர்ந்திருக்கும் கார் ஒன்றை தனது பற்களால் கடித்து இழுக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

பெங்களூருவின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள பன்னேர்கட்டா உயிரியல் பூங்காவில் 2 மாதங்களுக்கு முன் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

விலங்குகளை பார்வையிட சுற்றுலாப் பயணிகளுடன் சென்ற பாதுகாப்பு வாகனம், பேட்டரி பழுதாகி நின்றுள்ளது.

அப்போது அங்கு துள்ளி குதித்து வந்த சுமார் 5 வயதுடைய புலி ஒன்று, வாகனத்தின் பின்பக்கமுள்ள பம்பரை கடித்து சில அங்குல தூரத்துக்கு இழுத்து விளையாடத் தொடங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments