ரவுடி பினுவை நினைவுபடுத்திய விஜய்சேதுபதி... வருத்தமும் தெரிவித்து அறிக்கை!

0 15599

தமிழகத்தில் கடந்த சில வருடங்களாக வாள் வைத்து பிறந்த நாள் கேக் வெட்டியதாக பலரும் கைது செய்யப்பட்டுள்ளனர். ரவுடி பினு தன் தோழர்களுடன் வாள் கொண்டு கேக் வெட்டிதான் தமிழகத்தில் பிரபலமானார். பின்னர், கைது செய்து போலீஸ் பினுவை நொங்கு எடுத்தது. ரவுடி பினு போலவே பிறகு பல இளைஞர்கள் தங்கள் பிறந்த நாள் கேக்கை வாள் கொண்டு வெட்டி அந்த வீடியோவை இணையத்தில் பரவ விடுவார்கள். பிறகு , போலீஸார் அவர்களை துரத்தி துரத்தி சென்று கைது செய்து சிறையில் அடைத்த சம்பவங்கள் பல நிகழ்ந்துள்ளன.. இது குறித்த பல செய்திகள் பல முறை வெளியாகியுள்ளன. போலீஸாரும், இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அறிவுறுத்தியுள்ளனர்.

இந்த நிலையில், தன் பிறந்த நாளில் வாள் கொண்டு வெட்டி விஜய் சேதுபதி கொண்டாடியுள்ளார். விஜய் சேதுபதி வாள் கொண்டு கேக் வெட்டும் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகின. விஜய் சேதுபதிக்கு எதிராக காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆனாலும், தான் செய்தது தவறு என்று தானே முன்வந்து விஜய் சேதுபதி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ''கேக்கை வாள் கொண்டு வெட்டியது தவறான முன்னுதாரணம் என்று பலரும் கருத்து தெரிவித்ததால், இனிமேல் இது போன்ற விஷயங்களில் கூடுதல் கவனத்துடன் செயல்படுவேன் என்று விஜய் சேதுபதி தெரிவித்துள்ளார்.  யார் மனமாவது புண்பட்டிருந்தால் வருத்தம் தெரிப்பதாகவும் விஜய் சேதுபதி கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments