காணும் பொங்கலை முன்னிட்டு சென்னையில் சுற்றுலா தளங்களுக்கு வர பொதுமக்களுக்கு தடை

0 3078
சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா இடங்களுக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் காணும் பொங்கலை முன்னிட்டு சுற்றுலா இடங்களுக்கு வர பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மெரினா, பெசன்ட் நகர் உள்ளிட்ட கடற்கரைகள் சீல்வைக்கப்பட்டுள்ளன. கிண்டி குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களுக்கு வருவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரசை பரவுவதை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. எனவே காணும் பொங்கலை வீடுகளிலோ, உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளிலோ மட்டுமே கழிக்க முடியும். சுற்றுலா இடங்களில் எல்லாம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments