லடாக் எல்லைக் கட்டுப்பாட்டு கோடு அருகே இரு நாட்டு வீரர்கள், டேங்குகள் நிற்பது போன்ற படம் வெளியீடு
லடாக் பிராந்தியத்தில் இந்திய, சீன வீரர்கள் 100 மீட்டருக்கும் குறைவான தூரத்தில் டேங்குகளை நிறுத்தியுள்ள படம் வெளியாகி உள்ளது.
இதுகுறித்து சீன இணையதளமான வெய்போ மற்றும் சமூக ஊடகங்களில் அந்நாட்டு ராணுவத்தில் உள்ள ஒருவரே பதிவிட்டுள்ளார். இதில் சர்ச்சைக்குரிய பகுதியில் இந்திய, சீன டேங்குகள் ஒன்றுக்கொன்று எதிரெதிரே நிறுத்தப்பட்டுள்ளன.
அங்கொன்றும் இங்கொன்றுமாக சீன ராணுவ முகாம்களும், அதற்கு நேரெதிராக இந்திய ராணுவ முகாம் இருப்பது அந்தப் படத்தில் தெரியவந்துள்ளது.
இவை அனைத்தும் அதிகபட்சம் 94 மீட்டர் தூரத்திற்குள்ளாவே நிறுத்தப்பட்டுள்ளது கவனிக்கத்தக்கது.
இந்தியா சார்பில் டி 17 மற்றும் டி 90 ரக டேங்குகளும் சீனா சார்பில் 15 வகையான டேங்குகள் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த படத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
Comments