அமெரிக்காவில் நடைபெற்று வரும் டைனசோர் கண்காட்சி : சுற்றுலா பயணிகள் காரில் அமர்ந்த படியே கண்டுகளிப்பு
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் நடைபெற்று வரும் டைனசோர் கண்காட்சியினை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பார்வையிட்டு வருகின்றனர்.
இங்கு 70க்கும் மேற்பட்ட டைனோசர் வகை மாதிரிகள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன. நடந்து செல்லும் பிரமாண்ட டைனசோர்கள் மற்றும் பறந்து செல்லும் டைனசோர்கள் என அனைத்து வகை டைனசோர்களும் உள்ளன.
இங்கு வரும் சுற்றுலா பயணிகள் கொரோனாவில் இருந்து பாதுகாக்கும் வகையில் தங்களின் காரில் அமர்ந்த படியே இந்த டைனோசர் கண்காட்சியை பார்வையிட முடியும்.
இந்த டைனசோர் கண்காட்சியை இதுவரை 3லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டு ரசித்துள்ளனர்.
Comments