தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின
தஞ்சை மாவட்டத்தின் பல பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்திருந்த நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கின.
கடந்த ஒரு வார காலமாக பெய்து வரும் மழையால் கும்பகோணம், பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள், சோழபுரம், சாத்தங்குடி ,உடையாளூர், திருவிசைநல்லூர் போன்ற பகுதிகளில் சாகுபடி செய்திருந்த சம்பா பருவ நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
மேலும் இவை யாவும் முளைக்கத் தொடங்கியும், பல இடங்களில் அழுகியும் விட்டன.
இந்நிலையில் மழை நின்றாலும் வயலில் உள்ள தண்ணீர் வடிய நாட்கள் ஆகும் என்பதால் அரசு ஏக்கருக்கு 30ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டுமெ என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Comments