கர்நாடக மாநிலத்தில் ரூ.21,000 கோடியில் 13 புதிய சாலைகள் மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் தகவல்
கர்நாடகாவில் 21 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் 13 நெடுஞ்சாலைகள் உருவாக்கப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
அம்மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சுமார் 847 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்தச் சாலைகள் அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஹுப்பள்ளி- தார்வாட் இடையே 4 வழிச்சாலையும், பெலகாவியில் புறவழிச்சாலையும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுப் பேசினார்.
இதன் மூலம் ஹூப்பள்ளி பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும் என்றும் நிதின் கட்கரி கூறியுள்ளார்.
Comments