கொரோனா பரவலைத் தடுக்க இங்கிலாந்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு அதிகரிப்பு
கொரோனாவின் புதிய வீரியம் மிக்க பரவல் காரணமாக இங்கிலாந்தில் திங்கட்கிழமை முதல் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு கட்டுப்பாடு அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுவரை இரண்டு லட்சம் 13 ஆயிரத்துக்கு அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வெளிநாட்டுப் பயணிகள் மூலம் இந்நோய் மேலும் பரவலாம் என்பதால், சில நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அளிக்கப்பட்ட சலுகையை பிரதமர் போரிஸ் ஜான்சன் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
கொரோனா தொற்று இல்லை என்ற பரிசோதனை சான்றுடன் பயணிகள் வரவேண்டும் என்றும், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இங்கிலாந்து அரசு அறிவித்துள்ளது.
Comments