பாஜகவில் தாம் இணையவிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் மறுப்பு

0 2555
பாஜகவில் தாம் இணையவிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் மறுப்பு

பாஜகவில் இணைய தாம் டெல்லி செல்லவிருப்பதாக வெளியான தகவலை திரிணாமுல் காங்கிரஸ் எம்பியான நடிகை சதாப்தி ராய் மறுத்துள்ளார்.

அவர் டெல்லி சென்று அமித் ஷாவை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் கொல்கத்தாவில் செய்தியாளர்களிடம் பேசிய சதாப்தி ராய் முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு தமது ஆதரவு நீடிப்பதாக கூறினார்.

மம்தாவின் உறவினரும் அமைச்சருமான அபிசேக்கிடம் தொகுதியில் நிலவும் கட்சிப் பிரச்சனை குறித்து கூறியிருப்பதாகவும் அவருடைய உறுதிமொழியை ஏற்று திரிணாமூல் கட்சியில் நீடிப்பதாகவும்  சதாப்தி ராய் தெரிவித்துள்ளார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments