இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

0 3640
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆக உயர்வு

ந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் மருத்துவமனை இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 70ஆக உயர்ந்துள்ளது.

சுலவேசி தீவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 புள்ளி 2 அலகாக பதிவாகியிருந்தது. நிலநடுக்கம் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் அவசரம் அவசரமாக வீடுகளை விட்டு வெளியேறினர்.

மருத்துவமனை கட்டிடம் ஒன்று இடிந்து தரைமட்டமானதால், மீட்புக்குழுவினர் கட்டிட இடிபாடுகளை அகற்றி வருகின்றனர். இடிபாடுகளில் சிக்கி 70பேர் உயிரிழந்தநிலையில், 637 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்தில் மீட்புப் பணி நீடித்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments