டெல்லியில் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் வருகிற 19ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை என அறிவிப்பு

0 1975

டெல்லியில், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், வருகிற 19ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்ப பெறக்கோரி, தலைநகர் டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டம், 52ஆவது நாளாக நீடிக்கிறது.

இந்நிலையில், டெல்லி விக்யான் பவனில், மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பியூஸ் கோயல் ஆகியோர், 40 விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் 9ஆம் கட்டப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

அதில், உடன்பாடும் எட்டப்படாத நிலையில், மீண்டும், வருகிற செவ்வாய்க்கிழமையன்று, பேச்சுவார்த்தை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments