சிட் ஃபண்ட் மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரம்... ரோஸ் வேலி நிறுவனரின் மனைவி கைது

0 3440
சிட் ஃபண்ட் மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரம்... ரோஸ் வேலி நிறுவனரின் மனைவி கைது

சிட் ஃபண்ட் மோசடியில் பல்லாயிரம் கோடி ரூபாய் சுருட்டிய விவகாரத்தில், ரோஸ் வேலி குழும அதிபரின் மனைவி சுப்ரா குண்டுவை சிபிஐ கைது செய்துள்ளது.

ரியல் எஸ்டேட், ஜூவல்லரி என பல்வேறு தொழில்களை நடத்திய, ரோஸ் வேலி குழுமம், மேற்குவங்கம், ஒடிசா, பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் சிட் ஃபண்ட் மோசடி மூலம் சுமார் 20 ஆயிரம் கோடி ரூபாய் சுருட்டிய புகாரை, சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது.

ரோஸ் வேலி குழுமத்தின் சேர்மன் கௌதம் குண்டு 2015ஆம் ஆண்டிலேயே கைது செய்யப்பட்டார். அவரது மனைவி சுப்ரா குண்டுவிடம் கொல்கத்தாவில் விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் அவரது வீட்டில் வைத்து கைது செய்தனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments