போலியோ சொட்டு மருந்து வழங்கும் முகாம் நாடு முழுவதும் வருகிற 31 ஆம் தேதி நடத்த ஏற்பாடு

0 2036

கொரோனா தடுப்பூசி பணிகளால் ஒத்திவைக்கப்பட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் வருகிற 31-ந்தேதி நடைபெறுகிறது.

5 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை போலியோ நோய் தாக்காமல் இருப்பதற்காக அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களில் அரசு சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம்கள் நடத்தப்படுவது வழக்கம்.

16-ந்தேதி நடைபெற இருந்த போலியோ சொட்டு மருந்து முகாம் கொரோனா தடுப்பூசி செலுத்துதல் பணி காரணமாக இந்தாண்டு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் வருகிற 31-ந்தேதி போலியோ சொட்டு மருந்து முகாம் நடக்கிறது.டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் போலியோ சொட்டு மருந்து முகாமை தொடங்கி வைக்கிறார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments