அடுத்த நிதியாண்டில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்: கேரள நிதியமைச்சர் தகவல்
கேரளாவில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மாநில நிதியமைச்சர் தாமஸ் ஐசக் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அடுத்த நிதியாண்டில் 8 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதே போன்று பல்கலைக் கழகங்களில் 1000 புதிய பதவிகள் உருவாக்கப்படும்.
உயர்கல்வித் துறையில் 800 காலியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். சுகாதாரத்துறையில் 8000 புதிய பதவிகள் உருவாக்கப்படும். சமூக நல ஓய்வூதியங்கள் 100 ரூபாய் உயர்த்தப்படும்.
அனைவருக்கும் மலிவு விலையில் இணையதள வசதி வழங்கும் திட்டம் ஏப்ரல் மாதம் முதல் தொடங்கும் என்பது உள்பட பல்வேறு அறிவிப்புகள் இடம் பெற்றுள்ளன.
Comments