தடுப்பூசி போட்டாலும் தனிமனித இடைவெளி கட்டாயம் - தமிழக சுகாதாரத்துறை செயலாளர்

0 2630

தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முதல் கட்டத்தில் சுகாதாரத்துறை பணியாளர்கள் தன் விருப்பத்தின் பேரில் தடுப்பூசியை போட்டுக்கொள்ளலாம் என்றார்.

தமிழகத்தில் தற்போது வரை 4 லட்சத்து 39 ஆயிரத்து 500 பேர் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்பதிவு செய்துள்ளதாக அவர் கூறினார். தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சமூக இடைவெளி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

சமைத்த முட்டை மற்றும் இறைச்சிகள் மூலம் பறவைக்காய்ச்சல் நிச்சயமாக பரவாது என்றும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments