ரூ.917 கோடி செலவில் புதிய நாடாளுமன்ற கட்டிட பணிகள் தொடங்கின

0 1389

917 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய நாடாளுமன்ற கட்டிடம் கட்டும் பணிகள் தொடங்கியுள்ளன.

டாடா பிராஜெக்ட்ஸ் நிறுவனம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ளும் இந்த கட்டிடத்திற்கு கடந்த டிசம்பர் 10ஆம் தேதி, பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

888 இருக்கைகளுடன் மக்களவை மண்டபம், 384 இருக்கைகளுடன் மாநிலங்களவை மண்டபம், இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தை நடத்த 1272 இருக்கைகளுடன் மைய மண்டபம், பயோமெட்ரிக்ஸ் வாக்களிப்பு முறை வசதிகள், சபாநாயகர் கட்டுப்பாட்டில் உள்ள சாஃப்ட்வேரால் இயக்கப்படும் மைக்ரோஃபோன்கள் உள்ளிட்ட அதிநவீன வசதிகள் இதில் அமைகின்றன.

இது தவிர புதிய மத்திய தலைமைச் செயலகம், குடியரசுத் தலைவர் மாளிகையில் இருந்து இந்தியா கேட்டிற்கு புதுப்பிக்கப்பட்ட 3 கிலோமீட்டர் ராஜபாட்டை, புதிய பிரதமர் அலுவலகம், இல்லம் உள்ளிட்டவையும் சென்ட்ரல் விஸ்டா திட்டத்தில் கட்டப்படுகின்றன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments