ஆஸ்திரேலியாவில் சிக்கிய அமெரிக்க பந்தயப் புறா... நோய்ப்பரவல் உள்ளதால் புறாவை கருணைக் கொலை செய்ய திட்டம்?

0 1821

தங்கள் நாட்டில் சட்டவிரோதமாக நுழைந்த அமெரிக்க பந்தயப் புறா அதற்கான விளைவுகளை எதிர்கொள்ளும் என ஆஸ்திரேலிய பிரதமர் Michael McCormack தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பந்தயப் புறா ஒன்று ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் உள்ள Kevin Celli என்பவர் தோட்டத்தில்  சிக்கயிது. நோய்கள் பரவலை தடுக்கும் பொருட்டு உயிருள்ள விலங்குகள் மற்றும் பறைவைகளை ஆஸ்திரேயாவுக்குள் கொண்டு வர கடும் கட்டுப்பாடுகள் நடைமுறையில் உள்ளன.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவுக்குள் புகுந்த அமெரிக்க புறாவை நோய் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கையாக,  கருணைக் கொலை செய்ய அந்நாட்டு அரசு எண்ணியது.

அமெரிக்கா ஒப்புக் கொண்டால், பறவையை மீண்டும் அந்நாட்டிற்கே அனுப்பவும் ஆஸ்திரேலிய அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments