வாடிக்கையாளர்களைக் கவர அதிக சலுகைகளை அறிவிக்கும் விமான நிறுவனங்கள்

0 2624

விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக அதிகத் தள்ளுபடி, பெற்றோருடன் வரும் குழந்தைகளுக்கு இலவசப் பயணம் உள்ளிட்ட சலுகைகளை அறிவித்துள்ளன.

ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த எட்டிகாட் நிறுவனம் செப்டம்பர் இறுதி வரையிலான காலத்தில் பயணிக்க ஜனவரி 28ஆம் நாளுக்கு முன் பயணச்சீட்டுப் பதிவு செய்தால் குழந்தைகளை இலவசமாக உடன் அழைத்துச் செல்லலாம் என அறிவித்துள்ளது.

ஒவ்வொரு பெரியவரும் தங்களுடன் ஒரு குழந்தையை இலவசமாக அழைத்துச் செல்லலாம் என்றும், 2 பெரியவர்கள் பயணச்சீட்டு எடுத்தால் அவர்களுடன் 4 குழந்தைகளை அழைத்துச் செல்லலாம் என்றும் அறிவித்துள்ளது. 11 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments