டிரம்புக்கு 2019-ல் கமலா ஹாரிஸ் கொடுத்த பதிலடி உண்மையானது
அமெரிக்க அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகிபோது அவரை கிண்டலடித்த டிரம்ப் மீதான கண்டனத் தீர்மான விசாரணை, கமலா ஹாரிஸ் தலைமையிலேயே நடைபெறும் சூழல் உருவாகியுள்ளது.
2019ஆம் ஆண்டு டிசம்பரில், ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளருக்கான போட்டியில் இருந்து கமலா ஹாரிஸ் விலகியபோது, அவரை கிண்டலடிக்கும் விதமாக "We will miss you" என டிரம்ப் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.
கவலைப்படாதீர்கள் கண்டன தீர்மான விசாரணையில் சந்திக்கலாம் என அப்போது கமலா ஹாரிஸ் பதிலடி கொடுத்திருந்தார். அது இப்போது உண்மையாகியுள்ளது.
அமெரிக்க துணை அதிபராக பொறுப்பேற்க உள்ள கமலா ஹாரிஸ், செனட் சபை தலைவர் என்ற வகையில், டிரம்ப் மீதான கண்டனத் தீர்மான விசாரணைக்கு தலைமை தாங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments