தமிழகத்தில் 166 கொரோனா தடுப்பூசி மையங்கள் அமைப்பு - முன்னேற்பாடுகள் தீவிரம்
நாடு முழுவதும் நாளை கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ள நிலையில், தமிழகத்தில் அமைக்கப்பட்டுள்ள 166 மையங்களில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை தமிழகத்துக்கு 5 லட்சத்து 56ஆயிரத்து 500 தடுப்பூசி மருந்துகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 160 மையங்களில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்ட்ராஜெனகா இணைந்து உருவாக்கி, இந்தியாவின் சீரம் நிறுவனம் தயாரித்த கோவிஷீல்டு தடுப்பூசியும், 6 மையங்களில் பாரத் பயோடெக் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசியும் செலுத்தப்பட உள்ளது.
இதனிடையே, சென்னையில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையங்களுக்கான முன்னேற்பாடுகளை, மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு பார்வையிட்டார்.
Comments