கந்துவட்டி செயலி விவகாரத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற சீன நபரை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

0 1948
கந்துவட்டி செயலி விவகாரத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற சீன நபரை பிடிக்க விமான நிலையங்களுக்கு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிப்பு

கந்துவட்டி செயலி விவகாரத்தில் நாட்டை விட்டுத் தப்பிச் சென்ற ஹாங்க் என்ற சீனாக்காரனை பிடிக்க விமான நிலையங்களுக்கும் லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டுள்ள நிலையில், இண்டர்போல் உதவியையும் போலீசார் நாட உள்ளனர்.

லோன் ஆப் எனப்படும் கந்துவட்டி செயலி வழக்கில் 2 சீனர்கள் உள்ளிட்ட 4 பேர் கடந்த 30ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். இந்த கைது நடவடிக்கைக்கு 4 நாட்கள் முன்னதாக, மோசடிக்கு மூளையாக செயல்பட்ட ஹாங்க் என்பவன், சீனாவுக்கு தப்பிச்சென்றுள்ளான்.

சிங்கப்பூர் வழியாக விமானம் மூலம் சீனாவுக்கு தப்பி சென்ற அவன், மீண்டும் வந்தால் அடையாளம் கண்டு கைது செய்வதற்காக, நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை சர்வதேச அளவில் விரிவுபடுத்த, இண்டர் போல் உதவியை நாட உள்ளதாக, சென்னை  மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments