இந்தியா முதல் முறையாக 9 எம்எம் மெஷின் பிஸ்டலை ராணுவமும், டிஆர்டிஓ நிறுவனமும் இணைந்து உருவாக்கம்
இந்தியா முதல் முறையாக 9 எம்எம் மெஷின் பிஸ்டலை முற்றிலும் உள்நாட்டிலேயே உருவாக்கியுள்ளது.
ராணுவமும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து இந்த மெஷின் பிஸ்டலை உருவாக்கியுள்ளன. சாதனை படைக்கும் வகையில் 4 மாதங்களில் இந்த மெஷின் பிஸ்டல் உருவாக்கப்பட்டு, அஸ்மி என பெயரிடப்பட்டுள்ளதாக பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
வடிவமைப்பு மற்றும் பாகங்கள் தயாரிப்பில் 3டி பிரின்டிங் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், வீரர்கள் கைவசம் வைத்துக் கொள்ளவும், தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பயன்படுத்தவும் ஏற்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் தயாரிப்பு செலவு 50 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாகவே இருக்கும் என்றும், ஏற்றுமதித் தரத்திலானது என்றும் பாதுகாப்புத்துறை கூறியுள்ளது.
Comments