நான்காவது டெஸ்ட்: முதல் நாளில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் குவிப்பு

0 3141

பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலிய அணியினர் முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைக் குவித்துள்ளனர்.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியினர் முதலில் பேட்டிங் செய்தனர். தொடக்க வீரர்கள் டேவிட் வார்னர் ஒரு ரன்னிலும், மார்க்கஸ் ஹாரிஸ் 5 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். மார்னஸ் லாபுஸ்சேன் ஒருபுறம் பொறுமையாக விளையாடி ரன்களைச் சேர்த்தார்.

அவருக்குத் துணையாக நின்று ஸ்டீவன் சுமித், மேத்யூ வேட் ஆகியோரும் ஓரளவுக்கு ரன்களைச் சேர்த்தனர். மார்னஸ் லாபுஸ்சேன் 108 ரன்களில் ஆட்டமிழந்தார்.

முதல்நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் இழப்புக்கு 274 ரன்கள் எடுத்துள்ளது. டெஸ்ட் போட்டியில் முதன்முறையாகக் களமிறங்கிய தமிழக வீரர்களான நடராஜன் 2 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments