கர்நாடகாவில் சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து-11 பேர் பலி

0 11892

கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே சுற்றுலா வேனும் டிப்பர் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர்.

தவனகரே பகுதியிலிருந்து அதிகாலை 17 பேர் சுற்றுலா வேன் ஒன்றில் கோவா நோக்கிச் சென்றுள்ளனர். லிட்டிகட்டி என்ற இடத்தின் அருகே எதிரே அதிவேகமாக வந்த டிப்பர் லாரியும் சுற்றுலா வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டன.

இதில் இரண்டு வாகனங்களுமே அப்பளம் போல நொறுங்கி உருக்குலைந்த நிலையில், சம்பவ இடத்திலேயே 5 பேரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் 5 பேரும் சிகிச்சைப் பலனின்றி ஒருவரும் என 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments