லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விரைவான நடவடிக்கையால் எதிரிகளுக்கு தக்க பதிலடி - ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

0 1545
லடாக் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் விரைவான நடவடிக்கையால் எதிரிகளுக்கு தக்க பதிலடி - ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே

டாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்திய ராணுவம் விரைவான மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுத்ததாக ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே தெரிவித்துள்ளார்.

ராணுவ நாளையொட்டி டெல்லி போர் நினைவுச் சின்னத்தில் முப்படைகளின் தளபதிகள் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சிக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய ராணுவத் தளபதி மனோஜ் முகுந்த் நரவானே, 2020ஆம் ஆண்டு முழுவதும் சவால்களும் வாய்ப்புகளும் நிறைந்த ஆண்டாகும் எனத் தெரிவித்தார்.

லடாக்கில் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் ராணுவத்தினர் எதிரிகளுக்குத் தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்டார். நாட்டின் மண்டல ஒருமைப்பாட்டைக் காப்பதில் இந்திய ராணுவம் உறுதியுடன் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments