கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின
கடலூர் மாவட்டம் முழுவதும் இரவு பெய்த மழையில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. சிதம்பரம்,பரங்கிப்பேட்டை ,புவனகிரி, சேத்தியாதோப்பு, காட்டுமன்னார்கோவில், லால்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டியது.
இதில் சுமார் 50 ஆயிரம் ஏக்கரில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இரவில் கனமழையாகவும் பகலில் விட்டு விட்டு மிதமான மழையாகவும் பெய்து வருகிறது.
அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கி அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். பல இடங்களில் சாலைகளை வெள்ள நீர் சூழ்ந்ததில் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.
Comments